வவுனியா - தட்டாங்குளத்தில் வாய்க்கால்கள் புனரமைப்பு
வவுனியா - தட்டாங்குளத்தில் 5 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கும் வேலைத் திட்டத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டமானது நேற்று (29.02.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் கடன் திட்டத்தின் மூலம் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா, தட்டாங்குளம் குளத்தின் இரு மதகுகள் மற்றும் வாய்க்கால்கள் புனரமைக்கப்படவுள்ளது.
30 மில்லியன்
புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், வவுனியா மற்றும் மன்னார் பிராந்திய மத்திய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் எம்.சற். இப்ராகிம், நீர்ப்பாசன பொறியியலாளர் கே.தினேஸ்குமார், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் பரயநாளங்குளம், தவசிகுளம், சமனங்குளம், தட்டாங்குளம், விஞ்ஞானகுளம், ஈட்டிமுறந்தகுளம் ஆகிய குளங்கள் 30 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
