வலுவடையும் இலங்கை ரூபா: டொலரின் பெறுமதியில் இம்மாதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது இன்றைய தினம் 305.16 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (29.02.2024) வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி குறித்த பெறுமதி பதிவாகியுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 314.87 சதமாகவும் பதிவாகியுள்ளது.

டொலர் பெறுமதி மாற்றம்
நேற்றைய தினம் டொலரின் கொள்முதல் பெறுமதி 305.56 சதமாகவும், விற்பனை பெறுமதி 315.29 சதமாகவும் பதிவாகியிருந்தது. இதற்கமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310.54 சதமாகவும் விற்பனை பெறுமதி 320.40 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri