இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
உலக சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், காதலர் தினமான இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,041 டொலராக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 77.41 டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கை நிலவரம்
இவ்வாறான சூழலில் இலங்கையில் இன்றைய தினம்(14) தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 365400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 395000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களாக மாறமல் இருந்து வந்த தங்கத்தின் விலையானது இன்று திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri