காமெனி இறுதிச்சடங்கில் அமெரிக்காவுக்கு எதிராக கடும் கோஷங்கள்
ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வில், முந்தைய நாளை விட பல மடங்கு அதிகமான மக்கள் திரண்டிருந்தனர்.
கருப்பு உடை அணிந்திருந்த துக்கம் அனுஷ்டித்தவர்கள், காமெனிக்கு மரியாதை செலுத்தும் பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். அதேவேளை, டிரம்புக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். அவர்கள் எங்கள் மதத் தலைவரைக் கொன்றார்கள். அதற்குப் பதிலாக அவர்களது தலைவர் டிரம்பை கொல்ல வேண்டும், என மளிகைக் கடையில் பணிபுரியும் 29 வயதான கோலாம் ரெசா சபூனி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், டிரம்ப் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் பிற அதிகாரிகளுக்கு எதிராக ஈரானிலிருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் பல ஆண்டுகளாக கண்காணித்து வருகின்றன.
2020ஆம் ஆண்டு, ஈரானின் புரட்சிகரக் காவல் படையின் குத்ஸ் பிரிவின் தளபதியாக இருந்த ஜெனரல் காசிம் சுலைமானி மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு டிரம்ப் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட மற்றொரு நபரான, முகம்மது ரெசா ஷரீபி, எங்கள் தியாகி தலைவரின் இரத்தம் அவமதிக்கப்படும் வகையில் வெளிநாடுகள் செயல்பட அனுமதிக்கும் வெளிநாட்டு கொள்கை எங்களுக்குக் கூடாது.
இதுபோன்ற செயல்களுக்கு எங்கள் அரசு மற்றும் இராஜதந்திர அமைப்பு கடுமையான பதிலடி வழங்க வேண்டும், எனவும் தெரிவித்துள்ளார்.