நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலைமை தீவிரம்! இருவர் உயிரிழப்பு - விசேட அதிரடிப்படை களமிறக்கம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்ட கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மூன்றாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடையேயான மோதலால் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸின் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலுக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே சற்றுமுன் ஏற்பட்ட அமைதியின்மையால் 16 பேர் காயமடைந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளரை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5) ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதற்றம்
இந்நிலையில் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.