உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடும் - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
சூரிய ஒளி நேரடியாக உடலில் படுவதால் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான பாதிப்பு
இது குறித்த அறிவிப்பில் மேலும், கடுமையான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடும்.
சிறுவர்கள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளியில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

தவிர்க்க வேண்டிய விடயம்
எனவே, பொதுமக்கள் குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளியில் அதிக நேரம் நடமாடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், போதுமான அளவு நீர் அருந்துமாறும், இளநிற ஆடைகளை அணியுமாறும் சுகாதார அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening