அக்குரேகொட துப்பாக்கிச்சூடு - பொலிஸாருக்கு கிடைத்துள்ள இலக்கத்தகடு
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியொருவர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கொல்ல வந்தவர்கள் பயணித்த வாகனத்தினது என சந்தேகிக்கப்படும் இலக்கத்தகட்டை கொட்டாவ பொலிஸார் மீட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற கார், மோட்டார்சைக்கிளொன்றில் மோதியதால், காரின் உரிமத்தகடு கழன்று விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸாரின் சந்தேகம்
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது கரந்தெனிய சுட்டாவால் இயக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று மாலை 5.20 மணியளவில் அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது காரில் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |