தடுப்புக் காவலில் இருந்தவாறே காணொளி அழைப்புகளை மேற்கொண்ட ஹரக் கட்டா! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்
ஹரக் கட்டா என்றழைக்கப்படும் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் காணொளி அழைப்புகளை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் அழுத்தம் பிரயோகிக்கவும், செல்வாக்கு செலுத்தவும், அவருக்கு தடுப்புக் காவலில் விசேட சலுகைகளை வழங்கவும் பெருமளவு பணம் கைமாற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் இந்த விடயங்கள் வெளிவந்துள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல்
சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு அச்சத்தைத் தோற்றுவித்து, ஒருசிலர் பாரியளவான நிதி ஆதாயம் பெறுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளமை தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இது தொடர்பில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதன்படி, நிதிப் பரிவர்த்தனைகள், சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் இடையே உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகள் ஆகியவை புலனாய்வாளர்களின் தீவிரக் கவனத்திற்கு உள்ளாகியுள்ளன.
அதிர்ச்சித் தகவல்
அவ்வாறான பாரிய நிதிப் பரிமாற்றத்தின் பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக் கட்டாவுக்கு, அவரது குழந்தையுடன் காணொளி அழைப்புகளை மேற்கொள்வது போன்ற அற்ப சலுகைகள் சில வழங்கப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

அதற்காகவும் தனியாக பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சாதாரண சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு எந்தவொரு தொலைபேசி அழைப்பும் மேற்கொள்வதற்கான வாய்ப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்படும் அளவுக்கு பாரியளவான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர், கடுமையான கண்காணிப்பு மிக்க குற்றப் புலனாய்வுத்துறையின் காவலில் இருந்து கொண்டே காணொளி அழைப்புகளை மேற்கொண்டுள்ளமை தொடர்பான தகவல்கள் விசாரணையாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
You may Like THIS..
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 05 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan