இ.போ.ச சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக, 58 வயதான இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து சாரதியின் சாரதி அனுமதிப்பத்திர உரிமம் வாழ்நாள் முழுவதும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, நேற்று(19.11.202) மருதானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் சங்கராஜ மாவத்தையில் சோதனைக்காக , வழித்தட இலக்கம் 05 ஊடாக கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர்.
இதன்போது சாரதி அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து தொடர்ந்து பேருந்தை செலுத்தியுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதனால் பொலிஸார் அந்தப் பேருந்தைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்தியுள்ளனர்.

சோதனையின் போது, சாரதி மதுபோதையில் இருந்ததாக அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் நடத்தப்பட்ட சோதனைகளில் அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
நாரம்மலவைச் சேர்ந்த 58 வயதான சந்தேக நபர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ரூ. 35,000 அபராதம் விதித்ததுடன், அவரது சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்யவும் உத்தரவிட்டது.
இலங்கையில் நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடிய மக்கள் - தொடருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்