குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
குறுகிய காலத்தில் நாட்டில் பாரியளவு முன்னேற்றம் பதிவாகியுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை 2048ம் ஆண்டு வரையில் கட்டியெழுப்ப முடியாது எனவும், சம்பள அதிகரிப்பு மற்றும் தேர்தல்களை நடத்த முடியாது எனவும் கூறப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான ஓர் நிலையில் இருந்த இந்த நாட்டை குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை பல வழிகளில் கிரமமான முறையில் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில் கடந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் வரவு செலவுத் திட்டம் முதல் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் வரையில் பொருளாதார மூலோபயங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை அதிலிருந்து மீட்க முடிந்தது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.