நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் மண்சரிவு!
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று(20.9.2026) மதியம் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் மஸ்கெலியா பிரதான சாலையில் வணராஜா கெந்தகொல்லை கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் பாரிய மண் சரிவு காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - பொகவந்தலாவை, ஹட்டன் - சாமிமலை, ஹட்டன் - மஸ்கெலியா, ஹட்டன் - நோர்வூட் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது.
மண்சரிவு
இதனை தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து வீதியில் கொட்டி கிடந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை கினிகத்தேனை மினுவன் தெனிய பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டதனால் பொது போக்குவரத்து சில மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டது.
வீதியில் சரிந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து குறித்த வீதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.




