வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு: சம்பவ இடத்திற்கு சென்ற நீதிபதி

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation
By Thileepan Sep 20, 2026 02:32 PM GMT
Report

வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் காணப்பட்ட நிலையில் பதில் நீதவான் த. ஆர்த்தி  சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

குறித்த சடலங்கள் நேற்று (19.09) மாலை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் இருந்துள்ளனர்.  இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு: சம்பவ இடத்திற்கு சென்ற நீதிபதி | Body Found Thonikkal Vavuniya Bearing Stab Wounds

எனினும் அவர் முன்னரே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

உடற்கூற்று பரிசோதனை

சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத் தடுப்பு பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று (20.09) பதில் நீதவான் த. ஆர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு, சடலங்களை உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு: சம்பவ இடத்திற்கு சென்ற நீதிபதி | Body Found Thonikkal Vavuniya Bearing Stab Wounds

இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சுரேந்திர சேகர் மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. எஸ்.ரத்னமலலா ஆகியோரும் பிரசன்னமாகி விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய அலஸ்கிறின் என்ற பெண்ணும் அவரது மகனான 35வயதுடைய அயந்தன்   என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US