வெளிநாடொன்றிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தல்
குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
விசா இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தபோது குவைத் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்களே இன்று காலை (20) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.
வீட்டுப் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக குவைத்திற்குச் சென்றிருந்த இவர்கள், தங்களது ஒப்பந்தப் பணியிடங்களிலிருந்து தப்பித்து, வேறு இடங்களில் சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
நாடு கடத்தல்
குவைத் நகரிலிருந்து இன்று காலை 03.10 மணிக்கு வந்தடைந்த ஜசீரா எயார்வேஸ் விமானம் JN-551 (J9-551)) மூலம் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களைத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேவையான போக்குவரத்து மற்றும் நிதி ஆதாரங்களை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
மகாவலி தாழ்நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை