இலங்கைக் கடற்பரப்பினை சூழ எழுந்துள்ள அபாயம்
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் 21 ஈரானிய கப்பல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் 47 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 21 கப்பல்கள் ஈரானுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'MarineTraffic.com' இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், மாத்தறையிலிருந்து காலி, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு வரையிலான இலங்கையை அண்டிய சர்வதேச கடல் பகுதியில் இந்த 21 ஈரானிய கப்பல்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ட்ரீம் (Stream), ஹால்டி (Halti), ட்ரீம் II (Dream II), சீ க்ளிஃப் (Sea Cliff), ஸ்னோ (Snow), ஹெல்ம் (Helm), டைமண்ட் II (Diamond II), டீப் சீ (Deep Sea), டினோ I (Dino I), ஹெர்பி (Herby), செவின் (Sevin), ஆம்பர் (Amber), ஹென்னா (Henna), ஹியூஜ் (Huge), டோர் (Dore), சோனியா I (Sonia I), பெலிசிட்டி (Felicity), டியூன் (Dune), ஹீரோ II (Hero II), டெய்ஸி (Daisy) மற்றும் ஷிபா (Shiba) ஆகிய ஈரானிய கப்பல்களே இவ்வாறு இலங்கையைச் சுற்றியுள்ள சர்வதேச கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஈரானிய கப்பல்கள் கடந்த ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இலங்கை அருகே நிறுத்தப்பட்டுள்ள இந்த அனைத்து ஈரானிய கப்பல்களும் அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட கப்பல்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.