சவூதி அரேபியாவில் சிக்கிய அனோஜன்! இலங்கை அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கை
சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிரமாக கண்காணித்து வருவதாக ஊடகத் துறைய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில்,
சவூதி அரேபியா நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக் கொடுக்க அல்லது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதற்கு அரசாங்கம் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றது.
பல கட்ட கலந்துரையாடல்கள்
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பந்தப்பட்ட அரசாங்கத்துடன் ஏற்கனவே பல கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.