பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் தொடர் சீரற்ற காலநிலைக் காரணமாக பாடசாலைகளின் விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வலயக் கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, நாளை தினம்(21.09.2026) பாடசாலை விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை நிலவும் மாவட்டங்களில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலயங்களாக நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் கல்வி அமைச்சு இந்த தீாமானத்தை எடுத்துள்ளது.
குறிப்பாக மத்திய மற்றும் சப்கரகமுவ மாகாணங்கள் கடும் மழையுடனான காலநிலையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணித்தியாலங்களில ்கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் 210 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.