பல்வேறு குற்றச்சாட்டுகளில் 208 பொலிஸ் அதிகாரிகள் கைது - 1500 பேர் பணியிடைநீக்கம்
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 208 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், மேற்கண்டவாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
208 பொலிஸ் அதிகாரிகள் கைத
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்திற்குள் ஊழல் மற்றும் தகுதியற்ற அதிகாரிகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், அவ்வாறான அதிகாரிகளை அடையாளம் கண்டு சேவையிலிருந்து நீக்குவதற்கும், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தகுதியற்ற அதிகாரிகள் பொலிஸார் திணைக்களத்திற்குள் இருப்பதை வெறுமனே ஏற்றுக்கொள்வதுடன் நின்றுவிடாமல், அவர்களை அடையாளம் கண்டு நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் ஊடகப் பேச்சாளர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.