புதிய சட்டத்தினால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் ஆகியவை தற்போதைய வடிவில் நிறைவேற்றப்பட்டால், இலங்கைக்கு கிடைக்கும் GSP+ வர்த்தகச் சலுகை பாதிக்கப்படலாம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார்.
திருத்தங்களை மேற்கொள்க..
கொழும்பில் நேற்று(03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
குறித்த சட்டமூலங்கள் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியனவும் இந்த சட்டமூலங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
GSP+ சலுகை இழக்கப்பட்டால் இலங்கையின் ஏற்றுமதித் துறை மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதால், குறித்த சட்டமூலங்களை மீளாய்வு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.