7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஐரோப்பிய விமான நிலையங்களில் தீவிர சோதனை
ஐரோப்பாவில் ஒரே சமயத்தில் 7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மிரட்டல் விடுக்கப்பட்ட விமானங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு அதில் வெடிபொருட்களோ அல்லது வேறு எந்தவொரு சந்தேகத்திற்குரிய பொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிரடி சோதனைகள்
இருப்பினும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பல ஐரோப்பிய நாடுகளில் பெரும் பரபரப்பையும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த தூண்டியுள்ளன.

உரோமில் தரையிறங்கிய இரண்டு விமானங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதில் டப்ளினில் தரையிறங்கிய விமானத்தை இத்தாலிய விமானப்படை விமானங்கள் இடைமறித்து பாதுகாப்பாக தரையிறக்கி தீவிர சோதனையை நடத்தினர்.
லண்டனின் ஹீத்ரோ நகரில் இருந்து புறப்பட்ட ஒரு விமானம் உட்பட போலந்து நாட்டின் வார்சா நகரில் இரண்டு விமானங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதைப்போல பல்கேரியாவின் சோபியா நகரில் தரையிறங்கிய 2 விமானங்களுக்கும் இந்த மிரட்டலானது விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிலும் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.