நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை: ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி உருக்கம்
தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இலங்கை ஊடகவியலாளர் மற்றும் அரசாங்க விமர்சகர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
50 வயதான கேலிச்சித்திர செய்தியாளரும் இணையத்தளத்தின் கட்டுரையாளருமான பிரகீத், 2010ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியன்று கடத்தப்பட்டார்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பிரகீத்தை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என கண்டறியப்பட்டது.
விசாரணைக் குழுவின் அறிக்கை
கோட்டாபய ராஜபக்ச, 2019 நவம்பரில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஒன்பது இராணுவ அதிகாரிகளுக்கு கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
எனினும் 2020ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, பிரகீத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
முக்கிய சாட்சி
பிரகீத் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரை இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்ததாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரும் முக்கிய சாட்சி ஒருவரும் சாட்சியமளித்துள்ளனர்.
அதன்பின்னர், அவர்கள் ஆணைக்குழுவின் முன் தமது சாட்சியத்தை மாற்றிக் கூறியிருந்தனர் என்று ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பான சிஎப்ஜே கூறுகிறது.
கோட்டாபய ராஜபக்ச, 2022 இல் பதவி விலகிய நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான கடுமையான குற்றங்கள் தொடர்பாக பிரகீத்தின் வழக்கு மட்டுமே தற்போது நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
