ஆடம்பர காரினை அடுத்து உலங்குவானூர்தி - அதிரடி காட்டும் இலங்கை கோடீஸ்லவரர்
இலங்கையில் கோடீஸ்வர தொழிலதிபர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, உலங்குவானூர்தி கொள்வனவு செய்வதற்கு சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டட்லி தற்போது சிங்கப்பூரில் உள்ளதாகவும், சுமார் 9 மில்லியன் டொலர் பெறுமதியான உலங்குவானூர்தியை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று அல்லது நாளை இதற்கான உடன்பாடு எட்டப்படும் என்று டல்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டட்லி சிறிசேன
அரலிய அரிசி விற்பனை உட்பட 25 வணிகங்களை வைத்திருக்கும் டட்லி சிறிசேன, சமீபத்திய நாட்களில் ஆடம்பர ரோல்ஸ் ராய்ஸ் காரை கொள்வனவு செய்ததன் மூலம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியிருந்தார்.

காரினை கொள்வனவு செய்வதில் பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
இந்நிலையில் புதிய உலங்குவானூர்தியை கொள்வனவு செய்வதற்கு டல்லி சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 20 மணி நேரம் முன்
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் Cineulagam