சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு அச்சுறுத்தல்
அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்புக்கு கறுப்பு சுதந்திர தின போராட்டத்திற்கு சென்றவர்களின் பேருந்துகளை மறித்து அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை இராணுவ புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்தாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று(4.2.2026) காலை திருகோவிலில் இருந்து இரண்டு பேருந்துகளில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நோக்கிய பயணிக்கும்போது அக்கரைப்பற்றில் இராணுவ புலனாய்வுத்துறையினரால் மறிக்கப்பட்டது.
அச்சுறுத்
இதன்போது இராணுவ புலனாய்வுத்துறையினரும்> பொலிஸ் உத்தியோகத்தரும் பேருந்தில் வேறு பொருட்கள் இருப்பதாக கூறி கஞ்சா பைகளை இரண்டு பேருந்துகளிலும் வைத்து எம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

இதேபோன்று வேறு இடங்களிலிருந்து சிங்கள இளைஞர்களையும் சிங்கள ஊடகவியலாளர்களையும் அழைத்து வந்து தமக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.