சீசனிங் பவுடரில் போதைப்பொருள்..! 2 நாடுகள் அதிரடி நடவடிக்கை..
அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் "எவரிதிங் பட் தி பாகல்" என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தச் சீசனிங் பவுடரில் சேர்க்கப்பட்டுள்ள பாப்பி விதைகளில் போதைப்பொருளான மார்பின் மற்றும் கோடீன் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொப்பி விதைகள் இயற்கையிலேயே போதைத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், அறுவடைக் காலங்களில் தாவரத்தின் பாலுடன் தொடர்பு ஏற்படுவதால் போதைப்பொருள்களின் வீரியம் அதில் கலக்க வாய்ப்புள்ளது.
தென் கொரியாவில் தடை
போதைப்பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இணையதளங்களில் விற்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சீசனிங் பவுடர் விளம்பரங்களை சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அகற்றியுள்ளது.

மேலும், கைவசம் உள்ள பொருட்களை உடனடியாக அழிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் இதை வாங்கி வந்த நிலையில், ஆய்வில் போதைப்பொருள் கலப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சியோல் நிர்வாகமும் இதற்கு முழுமையான தடை விதித்துள்ளது.