கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட நபர்
குருணாகல், ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரவத்த பகுதியில் நேற்று இரவு நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எட்டம்பிட்டியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடூரமாக அடித்துக் கொலை
அவர் தென்னை தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.

அங்கு மற்றொரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தடியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், ஹெட்டிப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.