பிரதமர் ஹரிணி இந்திய உளவாளியாம்.. உயிர்ப்பலிக்கு தயாராக இருப்பதாக கஸ்ஸப தேரர் பகிரங்க அறிவிப்பு

Anuradhapura Anura Kumara Dissanayaka India Harini Amarasuriya
By Benat Nov 10, 2026 03:55 PM GMT
Report

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் ஒரு உறுப்பினர். இந்தியாவின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே அவர் தேசிய மக்கள் சக்திக்காகவும், மக்கள் விடுதலை முன்னணிக்காகவும் செயற்படுகின்றார் என்று பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் போராட்டத்தில் உயிர்ப்பலி எடுக்கவோ, சிறைக்கு அனுப்பவோ திட்டமிடப்படும் எனில், எங்களுடைய உயிர்களை தியாகம் செய்யவும், சிறைக்குச் செல்லவும் நாம் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அநுராதபுரம் புனித நகரத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கஸ்ஸப தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் ஒருசாரார் அங்கு தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இன்றைய போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிங்களக் கொடியை ஏற்றுவோம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் புனித நகரில் மேற்கொள்ளப்படவுள்ளத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஒவ்வொரு வரியாகவும், ஒவ்வொரு வார்த்தையாகவும், ஒவ்வொரு பக்கமாகவும் நாம் விளக்கிக் காட்டுவோம்.

இந்தக் கலாசார கொள்ளையை இந்தியாவிற்கு ஆதரவான பொம்மை ஆட்சியாளர் அநுர குமார ஊடாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு முன்னெடுக்கின்றார் என்பதை எங்களால் தெளிவாகக் கூற முடியும்.

பிரதமர் ஹரிணி இந்திய உளவாளியாம்.. உயிர்ப்பலிக்கு தயாராக இருப்பதாக கஸ்ஸப தேரர் பகிரங்க அறிவிப்பு | Harini Amarasuriya Is An Indian Intelligence Agent

அதேபோன்று, நாட்டின் தற்போதைய பிரதமர் ஹரிணி என்பவர், இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் ஒரு உறுப்பினர் என நாங்கள் கூறுகின்றோம். அவர் தேசிய மக்கள் சக்திக்காகவும், மக்கள் விடுதலை முன்னணிக்காகவும் செயல்படுவது இந்தியாவின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவேயாகும்.

பிரதமர் ஹரிணி குடும்பம் இல்லாத ஒரு பெண். இப்படி, குடும்பம் இல்லாத ஒரு  பெண் எவ்வாறு பிரதமராக முடியும்? எதிர்காலத்தில் நாட்டை ஒப்படைப்பதற்கு அவர்களுக்கு ஒரு பிள்ளைக் கூட இல்லை. அப்படியிருக்க அவர்கள் நாட்டைப் பற்றிச் சிந்திப்பார்களா..?

காலையில் இங்கிருந்து உணவு உண்டு, பகலில் டெல்லியில் இருந்து உணவு உண்ணும் துரோக ஆட்சியாளர்கள் பிரதமர்களாக இருக்கும் நாட்டில் எமக்கு நல்ல எதிர்காலம் இருக்குமா.

எனவே மக்கள் இது குறித்து மிகவும் தீவிரமாக கனம் செலுத்த வேண்டும். பிரதேச மட்ட்டங்களில் மகா சங்கத்தினர் இதற்காக அணிதிரள வேண்டும் என்று நாம் கோருகின்றோம்.

அநுராதபுரத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமெனின், அனைத்து பிக்குகள், பிக்குணிகள் என அனைவரும் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

எமது போராட்டத்தை எதிர்க்கும் ஒரு சில பௌத்த தேரர்கள் இங்கு இருக்கின்றார்கள். அவர்களிடம் நாங்கள் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம், தற்போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் இடங்கள் அழிக்கப்படுகின்றன. அந்த தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பது தொடர்பாக நீங்கள் ஏதாவது பேசியிருக்கின்றீர்களா?

பிரதமர் ஹரிணி இந்திய உளவாளியாம்.. உயிர்ப்பலிக்கு தயாராக இருப்பதாக கஸ்ஸப தேரர் பகிரங்க அறிவிப்பு | Harini Amarasuriya Is An Indian Intelligence Agent

இதற்கு எதிராக எந்தவொரு பௌத்த பிக்குவோ, பிக்குணியோ கருத்துத் தெரிவிக்க விரும்பினால், நீங்கள் தாராளமாக ருவன்வெலிசாய மகா போதி முன்பாக வந்து எங்களுடன் விவாதிக்கலாம்.

நாங்கள் லௌகீக புத்தரின் சீடர்கள். காரணங்களுடன்தான் எதிர்க்கின்றோம். காரணமின்றி எதிர்க்கவில்லை. இந்த இந்திய ஆக்கிரமிப்பாளரை விரட்டியடிக்க வேண்டும்.

அன்று வாரியபொல சுமங்கல தேரர், பிரித்தானியக் கொடியை கீழே இறக்கி, சிங்களக் கொடியை ஏற்றியதைப் போன்று, இன்று இந்தியக் கொடியை கீழே இறக்கி, சிங்களக் கொடியை நாங்கள் ஏற்றுவோம். அதனைத் தடுத்து நிறுத்த இந்த உலகத்தில் யாராலும் முடியாது.

இந்தியா எமது நாட்டை ஆக்கிரமிக்க வருமானால், அதற்காக உயிர்ப்பலி கேட்குமானால், அதற்கான முதல் உயிர்ப்பலியாக நாங்கள் இருக்கத் தயாராக இருக்கின்றோம். இந்தப் போராட்டத்திற்காக சிறைக்குச் செல்ல வேண்டுமானால், அதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால், இந்தப் போராட்டத்தை வெற்றியிலேயே முடிப்போம். தோல்வியில் முடிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.   

அநுராதபுர பிக்குகளின் போராட்டக் களத்தில் தவறான தொழில் செய்பவர்கள்! தேரர் ஒருவரின் அதிர்ச்சி தகவல்

அநுராதபுர பிக்குகளின் போராட்டக் களத்தில் தவறான தொழில் செய்பவர்கள்! தேரர் ஒருவரின் அதிர்ச்சி தகவல்

பல உண்மைகளை அம்பலப்படுத்திய பிரித்தானியா வாழ் இலங்கையரின் கண்டி வீட்டிற்கு தீ வைப்பு

பல உண்மைகளை அம்பலப்படுத்திய பிரித்தானியா வாழ் இலங்கையரின் கண்டி வீட்டிற்கு தீ வைப்பு


மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US