அரசாங்கம் மீது வாசுதேவ நாணயக்கார வைத்துள்ள நம்பிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நவ சம சமாஜக் கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் இனவாதத்தை ஒழிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.அதற்கான நம்பிக்கையை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. நாட்டை ஒன்றிணைக்கக் கூடிய பின்னணி அவர்களிடம் இருக்கிறது.
ஒழிக்கப்படும் இனவாதம்
அந்த நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.அதன்படி அவர்கள் செயல்பட்டுள்ளனர். எமது ஜனாதிபதி ஒரு சிங்களவர்.ஆனால் இனவாதமாக பேசவோ செயற்படவோ மாட்டோம் என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
இப்போது அவரது பேச்சை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எதிர்க்கும் குழுக்கள் இருப்பதால், இந்த பிரச்சினையை எந்த அளவிற்கு குழப்புவார்கள் அல்லது எந்த அளவிற்கு இதை செயற்படுத்த அனுமதிப்பார்கள்? என தெரியாது.

ஜனாதிபதியுடனான குழுவினரின் குறைபாடுகளை ஒதுக்கி வைப்போம். நேர்மறையான அம்சங்களை எண்ணுவோம். நம்பிக்கையுடன் சிந்திப்போம். இந்த அரசாங்கம் வந்த மற்ற அனைத்து அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டது.
எனவே இந்த மாற்றத்தை ஒரு நேர்மறையான மாற்றமாக மாற்ற முயற்சிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam