விவசாய விஞ்ஞான வினாத்தாள் வெளியான விவகாரம்! மற்றுமொரு பெண் பொறுப்பாளர் கைது
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
இச்சம்பவம் தொடர்பில் பரீட்சை மண்டப பொறுப்பாளர், மண்டப பணியாளர் மற்றும் ஆசிரியர் ஒருவர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam