கோர விபத்தில் சனத் நிஷாந்த உடன் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரிக்கு இழப்பீடு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இதனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்டாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியான 28 வயதான பிரபாத் எரங்க பொலிஸ் காவலில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
