சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரி தொடர்பான விபரங்கள் வெளியாகின
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
மஹவ பிரதேசத்தில் வசிக்கும் அனுருத்த ஜயக்கொடி என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்திற்கான காரணம்
ஒரு பிள்ளையின் தந்தையான இவர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையாற்றியுள்ளார்.
இவர், அமைச்சரின் ஆசனத்திற்குப் பின்னால் அமர்ந்துச்சென்றுள்ள நிலையில் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட போது, ஜீப் வண்டி பாரவூர்தியின் பின்புறம் மோதி பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri