பெக்கோ சமனின் தாயாரின் இறுதி அஞ்சலி! சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த 'பெக்கோ சமன்' தனது தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கோரி இதுவரை எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களினால் (12) திகதி பெக்கோ சமனின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரேத பரிசோதனை
இந்த நிலையில், அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ இறுதி அஞ்சலி செலுத்த கோரிக்கை விடுத்தாலும், தேவையான பாதுகாப்பை வழங்குவதாக மித்தெனியா பொலிஸ் உறுதி செய்தால் மட்டுமே பெக்கோ சமன் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்படுவார் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பெக்கோ சமனின் தாயாரின் பிரேத பரிசோதனை தற்போது தங்கல்லை வைத்தியசாலையில் நடைபெற்று வரும் நிலையில், பின்னர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிஸ் கூறியுள்ளது.
அதன்படி, பெக்கோ சமனின் தாயாரின் இறுதிச்சடங்குகள் நாளை மித்தெனியவில் உள்ள குடும்ப மயானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.