கொழும்புத் துறைமுகத்தில் மற்றொரு சந்தேகத்திற்குரிய கொள்கலன் - மறைந்துள்ள மர்மம்
கொழும்புத் துறைமுகத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கும் தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு கடத்த முயற்சி
அரிசி என கூறி ஏமாற்றி அதற்குப் பதிலாக இலத்தீன் அல்லது பித்தளைப் பொருட்கள் தொகையொன்றை இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, இக்கொள்கலன் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து, 800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராக, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது. .