கொடூரமாக தாக்கப்பட்டு நடுவீதியில் கைவிடப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை
கண்டி - வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில் தாயினால் வீதியில் கைவிடப்பட்டு சென்ற 4 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.
நேற்று காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை நடுவீதியில் இறக்கிவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்றிருந்தார்.
சிறுமிக்கு அறுவை சிகிச்சை
இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் அவசர எண்ணுக்கு அழைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய தாய் தப்பிச்செல்லும் காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து சிறுமியின் தாயையும் அவரது காதலர் என அடையாளம் காணப்பட்ட நபரையும் இன்று (14) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில்,கொடூரமாக தாக்கப்பட்டிருந்த சிறுமி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுமி மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.