கண்டியில் திடீரென தாழிறங்கிய நிலம் - யுவதி உட்பட நான்கு பேர் அதில் வீழ்ந்தமையால் பரபரப்பு
கண்டி நடைபாதையின் ஒரு பகுதி இன்று காலை திடீரென தாழிறங்கியமையால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
பொதுச் சந்தை வளாகத்திற்கு பின்னால் அமைந்துள்ள ஒரு பகுதியே இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லையென வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென தாழிறங்கிய நிலம்
விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் குறித்த நடைபாதை ஊடாக மக்கள் நடந்து சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பெரிய குழி ஒன்று ஏற்பட்டு 4 பேர் அதற்கு விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்தவர்களின் உதவியுடன் நால்வரும் வெளியே எடுக்கப்பட்டனர். அதில் ஒரு இளம் பெண்ணும் அடங்கும்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் அங்கு ஆரம்பகட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீதியில் நிலவும் ஆபத்தான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதிகாரிகள் அப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.