இந்திய விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்! சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய Visitor Visa
இந்தியா, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், தற்போதைய Tourist Visa முறைக்குப் பதிலாக Visitor Visa என்ற புதிய விசா பிரிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவின் சுற்றுலா விசா
புதிய விசா மூலம் சுற்றுலா மட்டுமன்றி, குறுகியகால வர்த்தகச் சந்திப்புகள், மருத்துவ ஆலோசனைகள், யோகா பயிற்சிகள், பாரம்பரிய மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் கலை, இசை, கலாசாரப் பயிற்சிகளிலும் வெளிநாட்டவர்கள் பங்கேற்க முடியும்.
இரண்டு வகையான Visitor Visa - V-1 விசா: 30 நாட்கள் செல்லுபடியாகும் பலமுறை நுழைவு விசா. சுற்றுலா, வர்த்தகச் சந்திப்புகள், மருத்துவ ஆலோசனைகள், யோகா மற்றும் குறுகியகாலப் பயிற்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

V-2 விசா: தகுதியைப் பொறுத்து 1, 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் விசா. இது ஏனைய நடவடிக்கைகளுடன் மலையேற்றத்திற்கும் அனுமதி வழங்கப்படும். மலையேற்றப் பயணிகளுக்காக ஆறு மாத கால பலமுறை நுழைவு விசாவும் வழங்கப்படவுள்ளது.
மருத்துவ விசா முறையிலும் மாற்றம் இந்தியாவின் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் புதிய மருத்துவ விசா பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
M-1 விசா: வழக்கமான மருத்துவச் சிகிச்சைகளுக்காக. - M-3 விசா: ஆயுர்வேதம் உள்ளிட்ட AYUSH பாரம்பரிய மருத்துவ முறைகளில் சிகிச்சை பெறுவதற்காக.
இந்த விசாக்கள் பொதுவாக ஒரு வருட காலத்திற்கு பலமுறை நுழையும் வகையில் வழங்கப்படும். நோயாளிகளுடன் வரும் உதவியாளர்களுக்கும் தனியான விசா வசதி ஏற்படுத்தப்படும்.
புதிய சுற்றுலா விசா
விசா விண்ணப்ப நடைமுறைகள் எளிமைப்படுத்தல் இந்தியாவின் தற்போதைய 13 முக்கிய விசா பிரிவுகள் 9 ஆகவும், 49 துணைப் பிரிவுகள் 23 ஆகவும் குறைக்கப்படவுள்ளன.
மேலும், விசா விண்ணப்பப் படிவங்களில் உள்ள கேள்விகள் மற்றும் தகவல் விவரங்கள் 65 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்படவுள்ளன. தற்போது 172 நாடுகளின் குடிமக்களுக்கு இந்தியா மின்னணு விசா வசதியை வழங்கி வருகிறது.

இந்த மாற்றங்கள் சுற்றுலா, மருத்துவம், யோகா, கலாசாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விசா நடைமுறைகள் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அமுல்படுத்தப்படும் என இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம்