வரிச் சலுகைகளால் முதல் ஆறு மாதங்களில் பில்லியன் ரூபாய் வரி வருமான இழப்பு!
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் காரணமாக அரசாங்கத்திற்கு 461.49 பில்லியன் ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் அறிக்கையின்படி, பெறுமதி சேர் வரி (VAT) மூலம் 242.95 பில்லியனும், சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மூலம் 135.27 பில்லியனும், இறக்குமதி வரி மூலம் 74.25 பில்லியனும், விசேட ஏற்பாடுகளின் கீழான கலால் வரி மூலம் 9.02 பில்லியன் ரூபாய்களும் இழப்பாகப் பதிவாகியுள்ளன.
அத்துடன் , உள்நாட்டில் பொருத்தல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளால் மட்டும் 9,005 மில்லியன் ரூபாய் வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிச் சலுகை
முதலீடுகளை ஊக்குவித்தல், ஏற்றுமதியை மேம்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும், இத்தகைய வரிச் சலுகைகளின் பொருளாதார மற்றும் நிதி தாக்கங்களைத் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.