பொதுமக்கள் ஏமாற வேண்டாம்! இலங்கை மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை போல் போலியான செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கப்பட்ட காணொளிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (CBSL)பொதுமக்களை எச்சரித்துள்ளது.
நிதி ஆலோசனை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதாக மத்திய வங்கி ஆளுநரை தவறாக சித்தரிக்கும் AI-உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் கொண்ட மோசடி காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
விளம்பரங்களால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்
இந்த விளம்பரங்களால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இதன் மூலம் வழங்கப்படும் நிதி ஆலோசனை, முதலீட்டு வாய்ப்புகள் அல்லது உரிமைகோரல்களின்படி செயல்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் தவறான விளம்பரங்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு மக்களை எச்சரித்துள்ளது.
போலி காணொளிகளை எடுத்துக்காட்டும் பொது விழிப்புணர்வு அறிவிப்பையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
பொது விழிப்புணர்வு அறிவிப்பு
எனவே எந்தவொரு நிதி முடிவுகளையும் எடுப்பதற்கு முன், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், அதன் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலம் தகவல்களை சரிபார்க்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் சமூக ஊடக பயனர்கள் இதுபோன்ற தவறான காணொளிகள் மற்றும் விளம்பரங்களைப் பகிர்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் வர்த்தகரை அச்சுறுத்தி கொள்ளையடித்த விவகாரம்! சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நால்வருக்கு பிறப்பிக்கப்படவுள்ள தீர்ப்பு