Gen - Z தலைமுறையை மறந்த அநுர.. எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
2027ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்கம் மக்களுக்கு அர்த்தமுள்ள நிவாரணங்களை வழங்கவோ தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன விமர்சித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டம்
மேலும் அவர், ”இளைய தலைமுறையினரின், குறிப்பாக 'மில்லினியல்ஸ்' (Millennials) மற்றும் 'ஜென் சி' (Generation Z) தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான எவ்வித முன்மொழிவுகளும் இந்த வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

உலகம் தொழில்நுட்ப ரீதியாக வேகமாக முன்னேறி வரும் நிலையில், இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளதாகவும், இளைஞர்களுக்குத் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான போதிய திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை.
2028ஆம் ஆண்டளவில் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை 13 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது, சர்வதேச நிறுவனங்களுக்கு 3.5 முதல் 4 பில்லியன் டொலர்கள் வரையிலான கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால், இந்தப் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து வரவு - செலவுத் திட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை” என்றார்.