தமிழ் வர்த்தகரை அச்சுறுத்தி கொள்ளையடித்த விவகாரம்! சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நால்வருக்கு பிறப்பிக்கப்படவுள்ள தீர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான கொள்ளை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 13) தீர்ப்பு வழங்கவுள்ளது.
நாரஹேன்பிட்டிய சந்தியில் தமிழ் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி அரிசி பாரவூர்தியைக் கொள்ளையிட்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணை
கடந்த 3 ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெலவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலிருந்து அரிசியை ஏற்றிச்சென்ற தொழிலதிபரை, பொலிஸ் அதிகாரி போல் நடித்துக் கொள்ளையடித்தது உட்பட ஏழு குற்றச்சாட்டுகளின் பேரில், சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (13) மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.