கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணிடமிருந்து தங்க நகைகள் பறிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்க நகைகளுடன் பெண் ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சட்டவிரோதமாக நாட்டுக்குக் நகைதொகையை கொண்டுவந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண், அஹுங்கல்ல, ஹல்கஹதெனிய வீதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தங்க நகைகள் பறிப்பு
சந்தேக நபரான பெண் டுபாயிலிருந்து நேற்று ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

குறித்த பெண் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 916 கிராம் எடையுள்ள தங்க வளையல்கள் மற்றும் சங்கிலிகள் அடங்கிய நகை தொகையை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இந்த நகைத் தொகையின் பெறுமதி 3 கோடி 66 இலட்சத்து 28 ஆயிரத்து 937 ரூபாவாகும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan