முன்னாள் அமைச்சரின் பெருந்தொகை எரிபொருள் மோசடி அம்பலம்
முன்னாள் அமைச்சர் ஒருவரின் மீன்பிடிப்படகுகள் மற்றும் வாகனங்களுக்கு மீன்பிடித்துறைமுகமொன்றில் கடனுக்கு டீசல் வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், இதற்காக செலுத்த வேண்டிய பதினான்கு இலட்சம் ரூபாய் இன்னும் வசூலிக்கப்படவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
கசிவின் காரணமாக வீணான எரிபொருள்
இதற்கிடையில், ஹெந்தல திக்கோவிட்ட துறைமுகத்தின் வடக்கு முனையத்தில் நிலத்தடி எரிபொருள் குழாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட எரிபொருள் கசிவால் ஏற்பட்ட இழப்பு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து இன்னும் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்த கசிவின் காரணமாக சுமார் 2700 லிட்டர் எரிபொருள் வீணானதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் இந்த குழாயை அமைத்துள்ளது.
இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam