இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி இன்று மாலை இலங்கையில் காலமானார்.
இவர் புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், நாளை சென்னைக்கு விமானம் மூலம் அவரது உடல் கொண்டுச்செல்லப்பட உள்ளது.
இந்நிலையில், பவதாரிணியின் இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
பிரபல பின்னணி பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமாகிய பதவாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி, பவதாரிணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 25, 2024
தனது பாசமகளை இழந்து துடிக்கும் @ilaiyaraaja அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் @thisisysr, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும்… pic.twitter.com/0xHSgbmsJ9
தேனினும் இனிய தனித்துவமான தனது குரல் வளத்தால் இளமையிலேயே ரசிகர்களை ஈர்த்தவர். மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருது பெற்றவர். பாடகி பவதாரிணி. பவதாரிணியின் திடீர் மறைவு திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
மேலும், "பவதாரிணியின் மறைவால் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இக்கட்டான நேரத்தில் இளையராஜாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தென்னிந்திய திரைப்பட நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
Shocked and saddened by the passing away of Bhavatharini ?Sending heartfelt condolences and prayers to Raja sir & the family during this difficult time. Om Shanti ? pic.twitter.com/rwtlAmrIAY
— Simran (@SimranbaggaOffc) January 25, 2024
இதன்படி, ''என் நண்பனுக்கு
எப்படி ஆறுதல்
சொல்வேன்.
மகள் பவதாரிணியின்
மறைவு, எங்கள்
குடும்பத்தினருக்கு
ஈடு செய்யமுடியாத
பேரிழப்பாகும்." என தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
என் நண்பனுக்கு
— Bharathiraja (@offBharathiraja) January 25, 2024
எப்படி ஆறுதல்
சொல்வேன்..
மகள் பவதாரிணியின்
மறைவு, எங்கள்
குடும்பத்தினருக்கு
ஈடு செய்யமுடியாத
பேரிழப்பாகும்.@ilaiyaraaja pic.twitter.com/TvQ6xxuSLz
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |