நீதிமன்றத்தில் முன்னிலையான ரணில் விக்ரமசிங்க! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி வழக்கை டிசம்பர் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) வழக்கு விசாரணைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
2023-ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, 1.66 பில்லியன் ரூபாக்கும் அதிகமான அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, ரணில் விக்ரமசிங்க 16.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
புலனாய்வு விசாரணைகள் நிறைவு
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட புலனாய்வு விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாகவும், அது தொடர்பான புலனாய்வு கோப்புகளும், ஆவணங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து ஒக்டோபர் 30 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
சட்டமா அதிபரின் அறிவுரை மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கை குறித்து விசாரிப்பதற்காக, இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் நிலைப்பாடும், எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளும் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட உள்ளன.
YOU MAY LIKE THIS