போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு முன்னரான மாநாட்டிற்காக ஜனவரி 25ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை
1,200 கிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருளை வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை தொடர்பில் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவர் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.