கொழும்பிலிருந்து சென்னை சென்ற யுவனுக்கு விமான நிலையத்தில் தடங்கல்
இலங்கையிலிருந்து இந்தியா சென்றடைந்த யுவன் சங்கர் ராஜா மற்றும் அவருடன் சென்ற குழுவினர் சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்ல சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை வரும்போது சென்னை விமான நிலையத்தில் தங்களது வாகனத்தை நிறுத்திவைத்துவிட்டு பின் மீண்டும் சென்னை வந்தடைந்த நிலையில், விமான நிலைய ஊழியர்கள் அவர்களின் கார்களை பூட்டியுள்ளனர்.
இளையராஜாவின் மகளும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி நேற்று (25.01.2024) இலங்கையில் காலமானார்.
இதனை தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பவதாரணி உடலானது இன்று விமானம் மூலம் சென்னை கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில் அதே விமானத்தில் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் சென்றபோது அவர்களை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை எரோ ஹப் ஊழியர்கள் பூட்டிய நிலையில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் பூட்டப்பட்ட காரில் காத்திருந்தனர்.
பின்னர் அங்கு வந்த ஊழியர் பூட்டை எடுத்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
