அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அடுத்த 36 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் மின்னல்
இன்று (4) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட பொதுவான வானிலை முன்னறிவிப்பின்படி, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பிற பகுதிகளில், பிற்பகல் 2 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri