சிறைச்சாலைக்குள் இருந்து கஞ்சிபாணி இம்ரானுக்கு கமாண்டோ சலிந்த கடிதம்! பல ரகசியத் தகவல்கள் அம்பலம்
கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான கமாண்டோ சலிந்த என்பவர், சிறைச்சாலைக்குள் இருந்தபடியே கஞ்சிபாணி இம்ரானுக்கு கடிதமொன்றை அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
போதைப் பொருள் வர்த்தகம், ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் மற்றும் கணேமுல்லை சஞ்சீவ படுகொலை சம்பவம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கமாண்டோ சலிந்த தற்போதைக்கு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்! புதல்வரைக் காப்பாற்ற விஜயதாச ராஜபக்ச செய்த செயல் அம்பலம்
கஞ்சிபாணி இம்ரானுக்கு கடிதம்
இதற்கிடையே கமாண்டோ சலிந்தாவின் தாயார் தன் புதல்வரைப் பார்க்க சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோது, 'கஞ்சிபாணி இம்ரான்' என்ற மற்றொரு பாதாள உலகக்கும்பல் புள்ளிக்கு அனுப்பத் தயாராக இருந்த ரகசியக் கடிதமொன்றை தன் தாயாரிடம் ஒப்படைக்க கமாண்டோ சலிந்த முயற்சித்துள்ளார்.

இருப்பினும், சிறை அதிகாரிகள் கமாண்டோ சலிந்தவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நிலையில், குறித்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் எதிர்காலக் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல அதில் ரகசியத் தகவல்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 28 June, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.