வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செல்வோருக்கு அவசர எச்சரிக்கை
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர் இன்று (13.08.2026) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைதாகியிருந்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.