இறுதி கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்..! அரச தரப்பு சாட்சியாக மாறி உண்மைகளை அம்பலப்படுத்திய சஹ்ரான் குழு உறுப்பினர்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான முக்கிய வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், சஹ்ரான் ஹாஷிமின் தற்கொலைத் தாக்குதல் குழுவில் இருந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார்.
இந்த விசாரணையில் சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியது வழக்கில் ஒரு பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.
சஹ்ரான் ஹாஷிமின் குழுவோடு இருந்த காலகட்டத்தில், அவர் அவதானித்த பல ரகசியமான உண்மைகளை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.
சஹ்ரான் ஹாஷிம் யாருடைய தேவைக்காகச் செயற்பட்டார் என்பது போன்ற பல மர்மமான விடயங்கள் குறித்து அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சில பிரதிவாதிகள் வழங்கிய வாக்குமூலங்கள், அவர்களால் சுயமாக (தன்னார்வமாக) வழங்கப்பட்டவை என்பது உண்மைத்தன்மை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் மெதுவாக நடந்த விசாரணை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தினசரி அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் NewsInsightTamil நிகழ்ச்சி..