சற்றுமுன் காலியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
காலி பிரதேசத்தில் சற்றுமுன்னர் மீண்டுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், காலி - ரத்கம அருகே பன்வில பிரதேசத்தில் இன்று(28.09.2026) நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் மீதே T-56 ரக துப்பாக்கியால் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நிழல் உலகக்குழுக்களுக்கு இடையேயான மோதல் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தள்ளனர்.

காலி - பத்தேகம பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து இன்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.