ஈரானிய நாட்டவர்களுக்கு இலங்கை நீதிமன்றால் ஆயுள் தண்டனை விதிப்பு
2019ஆம் ஆண்டு கொழும்பில் மட்டக்குளிய கடற்பகுதியில், படகு மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றத்துக்கு உள்ளான, 07 ஈரானிய நாட்டவர்களுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிதா இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்.
போதைபொருள் கடத்தல்
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதியன்று, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, மட்டக்குளி கடற்பகுதியில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியதாக கூறப்பட்டு இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் தமது சட்டத்தரணி ஊடாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையிலேயே, குறித்த 07 ஈரானிய நாட்டவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள வரலாற்று மையத்தில் தாயக நினைவுகளோடு இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
